Friday, 10 January 2025

EttilE varai pAttilE 294 - 350

 

294 - 350 ஏட்டிலேவரை பாட்டிலே - பொதுப் பாடல்

 

மனிதர்களை புகழ்ந்து பாடிச் சம்பாதிக்கும்

பொருள்களை யாருடனும் பங்கிடாது,

எல்லோரும் பழிக்கும்படி வாழ்ந்து, 

இந்த உடல் பேய்களுக்கு 

உணவாக வருவது நீங்காதோ.

தேவயானையின் மணவாளா,

சூரனுடன் போரிட்ட வேலாயுதனே,

மயில் வாகனனே,

திருச்செங்கோடு, மருதமலை, 

முதலிய தலங்களில் அமர்ந்தவனே,

வேடர்குல வள்ளியை மணந்தவனே,

பூக்களால் உன் திருவடியைப் 

போற்றும் தேவர்கள் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...