Thursday, 9 January 2025

ettudan oruthoLai 289 - 345

 

289 - 345 எட்டுடன் ஒருதொளை - பொதுப் பாடல்

 

இந்த உடல், இரு வினைகளினால் தோய்ந்து,

தீய வழியில் நான் போகாமல்,

96 தத்துவங்களுக்கும் 

அப்பாற்பட்ட ஞானம் வெளிப்பட,

முஃகுணங்கள் அழிய, 

என் ஆணவ உணர்ச்சியும் அழிய,

எனக்கு நீ உபதேசிக்கும் ஒரு நாள் வருமோ.

காளிக்கு நேர் நடனம் ஆடிய 

சிவபிரான் கேட்க,

பிரணவ மந்திரத்தின் பொருள் 

அவர் வலது காதில் ஓதின குருநாதனே,

சூரன் அழிய வேலை எறிந்தவனே,

பச்சை மயில் மீது நடனம் செய்பவனே,

இந்திரன் பொலிவு பெற்று விளங்க,

அவனை வாழவைத்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...