Friday, 10 January 2025

ezhuthariya aRumukhamum 291 - 347

 

291 - 347 எழுதரிய ஆறுமுகமும் - பொதுப் பாடல்

 

முடிவே இல்லாத பிறப்புகள் 

என்னை விட்டு நீங்க,

உன் திருவடி எனக்குக் கிடைக்குமாறு 

நீ நினைக்கக் கூடாதோ.

எழுத முடியாத ஆறு முகங்களும்,

அழகிய நெற்றியும், அணிகலன்களும்,

கருணை பொழியும் பனிரெண்டு  கண்களும்,

பனிரெண்டு குண்டங்களும், 

அழகான கைகளும்,

செம்-போன் பூணூலும், 

உடைமணியும்,

இரு திருவடிகளும், 

முத்தான கிண்கிணியும்,

அழகிய மயிலும், வேலாயுதமும்,

இவ்வாறு அழகுமயமான குமரனே,

இமயமகள் பார்வதிக்கு 

மனம் நெகிழ்ந்த

சிவபிரானின் நர்குணம் 

பொருந்திய பிள்ளையே,

தேவர்கள் தம்பிரானே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...