208 - 248 இருவினை அஞ்ச - திருப்பந்தணை நல்லூர்
இருவினைகளும் பயப்பட,
நோய்கள் வராது
மாய,
ஆணவம் கன்மம் மாயை எனும்
மும்மலங்களும் ஒழிய,
உனது அருள் பெறுக,
இசையுடன் உன் திருப்புகழைப் பாடி,
முருகா வேலா என நான் கூற
நடனம் செயும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.
மருதமரம், கம்சன் இவர்களை மாய்த்த
அரியின் மருகனே,
அசுரர்கள் ஒடுங்க வந்த மயில் வீரனே,
இடபாகத்தில் அமர்ந்த பார்வதியுடன்
ரிஷபவாகனன் விரும்பும் முருகனே,
திருப்பந்தணை நல்லூர் எனும் ஊரில்
வள்ளி தேவயானையுடன் இன்புறும் பெருமாளே.
No comments:
Post a Comment