Wednesday, 8 January 2025

kANoNAthathu 236 - 283

 

236 - 283 காணொணாதது - தேவனூர்

 

காணமுடியாததும், 

உருவமும் அருவமுமாக இருப்பதும்,

பேச முடியாததும், 

நான்கு வேதங்களுக்கும் முடிவாய் நிற்பதும்,

மனிதர்களால் அறியமுடியாததும்,

திருமால் பிரமா இவர்களாலும் அறியமுடியாததும்,

சத்தி சிவம் எனும் பேருடையதாகவும்,

நூல்களில் சாரமாக இருப்பதும்,

திருவருள் நிறைந்ததும், 

ஆனவன் நீதான்.

அசுரரை வென்றவனே,

பார்வதியின் ஞானப்பால் அருந்தினவனே,

பிரமனை குட்டினவனே, 

வள்ளியை திருவிளையாடல்கள் செய்து அணைத்தவனே,,

மெய்ஞான யோகிகளின் 

உள்ளத்தில் விளங்குபவனே,

தேவனூரில் எழுந்தருளிய 

தேவர்கள் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...