Wednesday, 8 January 2025

thArakAsuran charinthu 237 - 284

 

237 - 284 தாரகாசுரன் சரிந்து - தேவனூர்

 

தாரகாசுரன் நிலை பெயர்ந்து விழ,

மேருமலை நடுக்கம் கொள்ள,

கடல் கலக்கமுற, 

வேலை செலுத்தினவனே,

தேவயானையும் வள்ளியும் 

ஆசைகொள்ளும் நண்பனே,

மயில் வாகனனே, என்றெல்லாம்

என் ஆசைதீர உன்னை புகழ்வேனோ.

கங்கை, கபால மாலை, பாம்புகள்

இவற்றை அணிந்த ஈசனார் ஆகிய சிவனது

இடபாகத்தில் அமரும் 

பார்வதியின் பெரும் செல்வமே,

தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி,

பூமியில் வணங்கும் 

தேவனூர்வாழ் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...