162 - 191 குடிவாழ்க்கை அன்னை - வள்ளிமலை
நல்ல குலத்தில் செல்வதுடன் பிறந்து,
குருவின் உபதேசமொழிகளை அறியாமல்
நாட்களைக் கழித்த அடியேனை,
சுடுகாட்டில் எரிப்பதற்கு முன்பாக
உனது திருவடிகளை உணர்ந்து அறிவேனோ.
கயிலாயத்தில் மயில் மீது விளங்குபவனே,
வடிவழகி வள்ளியை நல்ல நேரத்தில் மணந்தவனே,
நான் முன்பு செய்த குற்றங்களைப் பொறுத்து,
உன்னை வணங்கும்படி அருளிய செல்வமே,
அடியார்களுக்கு நல்ல பெருமாளே.
No comments:
Post a Comment