Tuesday, 7 January 2025

pachchai oNgiri 206 - 246

 

206 - 246 பச்சை ஒண்கிரி - திருநள்ளாறு

 

பச்சை நிறம் கொண்ட ஞான அழகி

பராசத்தியான பார்வதியின் குமரனே

என்று கூறி உள்ளம் உருக மாட்டேனோ.

பன்னிரண்டு புயன்களும் கண்களும் 

உள்ள ஆறுமுகனே,

தேவர்கள் நாடு வாழ 

சூரர் குலத்தை அழித்த வேலனே,

ஆதிசேஷன் மீது படுக்கை கொண்ட,

கருமுகில் நிறமுள்ள, கருடவாகனர்,

சாரங்க வில், பஞ்சஜன்ய சங்கு, சுதர்சன சக்ரம்,

இவற்றை கொண்ட திருமாலின் மருகனே,

வள்ளி தேவயானையுடன்

திருநள்ளாறு எனும் தலத்தில் உறைபவனே,

தேவர்கள் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...