205 - 245 சிங்கார ரூபமாயில் வாகன - வங்கார மார்பில் - திருச்செங்காட்டங்குடி
மாயவாழ்க்கையில் சுழலாமல்,
யோகவழிகளில் கிடைக்கும்
நாதத்தோடு கலந்து,
இருள் நீங்கி, உபதேசத்தை என் காதில் ஓதி,
உன் பாதமலரைச் சேரும்படியான
அருளைத் தருவாய்.
அழகனே, மயில் வாகனனே,
கந்தா, குமரா, குருநாதா,
பார்வதிகுமாரா,
ஜோதிரூபம் கொண்ட வேலாயுதா,
சிவனுக்குக் குருநாதா,
சூரனையும் கடலையும்
க்ரௌஞ்சமலையையும் பொடியாக்கினவனே,
பிரமனை மோதினவனே,
வள்ளியை அணைந்தவனே,
சிவபிரான் பிள்ளைக்கறியை உண்ணப்புகுந்த
திருச்செங்காட்டங்குடி
எனும் தலத்தில்
தமிழ்
மாலையைப் புனைந்த ஆறுமுகர்.
தேவர் பெருமாளே.
No comments:
Post a Comment