Tuesday, 7 January 2025

padipunal neruppadar 226 - 271

 

226 - 271 படிபுனல் நெருப்படற் - திருவிடைக்கழி

 

ஐம்பொறிகள், முக்குணங்கள், 

நோய்கள் உள்ள இந்த உடலைத் தாங்கி, 

நான் அலைந்து திரிவது நீதியாகாது.

உன் திருவடிகளை எனக்கு அளித்து,

உன் அடியார்கள் கூட்டத்தில் 

என்னையும் சேருமாறு அருள்புரிவாய்.

சேவல் கொடியுடையோனே,

ஒளி பொருந்திய வேலாயுதனே,

சிவபிரானின் மெய்ப்புதல்வனே,

முத்தமிழ் வித்தகனே,

கணபதியின் தந்தை சிவபிரானுக்குக் குருவே,

அந்த கணபதியின் தம்பியே,

ஞானநிலையில் விளங்குபவனே,

பூமியில் எங்குள்ளவர்க்கும், 

தன்னிடம் வந்து வேண்டினால்,

அவர்களுக்கு முத்தியைத்தரும் தலமாகிய

திருவிடைக்கழியில் அமர்ந்த பெருமாளே.

 



No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...