164 - 194 சரவணஜாதா நமோநம - விநாயகமலை - பிள்ளையார்பட்டி
சரவணப் பொய்கையில் தோன்றினவனே,
கருணைக் கடலே, அழகனே,
என்றும் இளையவனே, போர்வீரனே,
சேனைகள் உள்ள ஊராகிய திருப்போரூரானே,
எல்லா உலகங்களுக்கும் இறைவனே,
ஞான வடிவுடையவனே,
இந்திரனுக்கு அரசே,
பார்வதிமைந்தா,
உன் திருவருளைத் தந்தருள்வாய்.
மேருமலை இடிபட,
அசுரர்கள் வலிமை கெட
வேலாயுதத்தை செலுத்தினவனே,
திருமாலும் பிரம்மாவும் ருத்திரனும் போற்ற
மயில் வாகனத்தில் வரும் இறைவனே,
பிள்ளையார்பட்டியில் வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment