244 - 293 சயிலங்கனைக் குருகி - மதுராந்தகம்
மலைமகளுக்கு,
அவள் பத்தியில் உருகி
இடப்பக்கம்
கொடுத்த சிவனார்,
தாண்டவ
நிர்த்தம் ஆடுபவர்,
சடையில்
கங்கையை வைத்த
சிவனுக்கு
அவர் மனம் உருக
உபதேசித்ததை
எனக்கும் உபதேசித்தால்
உன்
குருத்துவம் குறைந்து போகுமோ.
வேலால் கடலில்
மாமரமாக நின்ற சூரனை பிளந்து
தேவர்கள்
வாழ.
உலகத்தை
ஒருநொடியில் சுற்றும்
மயிலை
பாய்ந்தோடச் செய்தவனும்,
உக்கிர
பாண்டியனாக அவதரித்து
மேருமலையை
தன செண்டாயுததால்
அடித்து
பொன் கொட்டச் செய்தவனும்,
மதுராந்தகத்துக்கு
வடபகுதியில்
திருச்சிற்றம்பலம் எனும்
கோயிலில் அமர்ந்த பெருமாளே.
No comments:
Post a Comment