212 - 254 திமிர மாமன மாமட - திருப்போரூர்
என் வருத்தங்களையும் ஆணவத்தையும்
விலக்கும் ஞானசூரியனே,
நாக ஆபரணரும், வேத முதல்வருமான
சிவபிரானின் குமாரனே,
நாராயணனின் மருகனே,
அன்னையும் உமாதேவியும்
கலைச் செல்வியுமான
நாராயணி பெற்ற தலைவனே,
குருநாதனே, குகனே, குமரேசனே, சரவணனே,
வள்ளி மீது ஆசைகொண்டவனே,
பிரணவப் பொருளானவனே,
தேவாரத்தை உலகுக்கு கற்பித்தவனே,
திருநீறில் திருப்தி அடைபவனே,
சேவல் கொடியுடையோனே,
வேலாயுதனே, வாதத்தில் வென்றவனே,
தக்க சமயத்தில் உதவும் தலைவனே,
எல்லா வேதங்களும் தொழும்
சமராபுரி எனும் திருப்போரூரில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment