239 - 286 விழுதாதெனவே - நாகப்பட்டினம்
தேகமே ஆத்மா, போகமே மோக்ஷம்
என வாழும் நான்,
உன்னை புகழ்ந்து துதிக்க
அழியாவரம் தருவாய்.
உன் அடியார்கள் வினையை
அடியோடு அறுப்பவனே,
தேவர்கள் அரசே,
கருணைக்கு இருப்பிடமானவனே,
வேதத்தில் முடிவானவனே,
வேலை உடையவனே,
என்னை ஆண்டுகொண்டவனே,
எது தரவேண்டுமோ அதைத் தந்தருள்,
இணையில்லா நாகப்பட்டினத்தில்
வீற்றிருப்பவனே.
No comments:
Post a Comment